எழுத்தாளர்: அ.தஸ்லிமா
பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு விழா.
பலூன் மேலே பறந்தது.
வகுப்பில் முதல் மாணவனாக இருந்த அரவிந்த என்ன செய்கிறான் என அறிய
அனைவருக்கும் ஆவல். அரவிந்த் நீ என்ன செய்ற ? என நிஸா கேட்க நான் முடி வெட்ற கடை
வைத்துள்ளேன் என அரவிந்த் பதில் அளித்தான்.
பலூன் கிழே வந்தது.
சூப்பர் ஸ்டார் உட்பட பிரபலங்களுக்கு அவன் தான் முடி வெட்றான். ஒருத்தருக்கு முடி
வெட்ட முப்பதாயிரம் வாங்குறானாம் குமார் கூறினான்.
பலூன் மேலே பறந்தது.
அரவிந்த ஒன்னும் அவ்வளவு திருப்தியாய் இல்லை. ரோசன்னா பெரிட்டி மாதிரி
வரலையின்னு வருத்தம் இருக்கு. அவன் அப்பவும் அப்படித்தான். இப்பவும் அப்படித்தான்.
வாழ்க்கையில் பலூன மேலும் கீழுமாகவே பறக்கும் போல.
முற்றும்.