எழுத்தாளர்: குட்டிபாலா
அந்த மாடல் நடிகை பெருந்தொகை கேட்கிறாள். பற்பசை விளம்பரம் நம் கை விட்டு போய்விடும்” என்ற அதியமானை அதிர்ந்து நோக்கினான் பாண்டியன். அப்போது குழந்தை குமுதனோடு சிரித்தபடி வந்த நந்தினியைப் பார்த்ததும் “இல்லை பாண்டியா.
அந்த விளம்பரம் நமக்குத்தான். இந்தப் பெண்தான் மாடல். இவளின் முத்துப்போன்ற வெண்பற்களைப் பார்” என்ற அதியமானிடம்.
“அவள் ஊமை” என்றதும் “டப்பிங்கில் சமாளிப்போம்” என்றான் .
இப்போது நந்தினி முன்னணி விளம்பர மாடல்.
நாவைப் பறித்தாலும் அழகான பல்வரிசையினை தந்த ஆண்டவனுக்கு நாளும் நன்றி சொல்கிறாள் நந்தினி.
நன்றி