எழுத்தாளர்: ஆ. சந்திரவதனா
மல்டி மில்லியனர் சிவராமன் காரிலிருந்து இறங்கி அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
அனைத்து ஊழியர்களும் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவித்தார்.
சிவராமன் தனது உரையை ஆரம்பித்தார். உங்களின் கடுமையான உழைப்பினாலும் அன்பாலும் என் மீது கொண்ட நம்பிக்கையாலும் நாம் அனைவரும் இண்டஸ்ட்ரியில் வளர்ந்து வருகிறோம்.
நான் முதன் முதலில் ஆரம்பித்த ஊக்கு தயாரிப்பை இன்றுவரை கைவிடாமல் இருப்பதை பார்த்து பலரும் சிரிப்பார்கள். டிஜிட்டல் கேமரா, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருள்களை தயாரிக்கும் நீ எதற்கடா இந்த ஊக்கு தயாரிக்கிறாயென்று.
இந்த ஊக்கு எனக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுத்த பாடங்கள் அநேகம். என் பள்ளி காலங்களில் பட்டனில்லாத சட்டையில் மானத்தை மறைக்க நான் குத்திய ஊக்கு எனக்குள் ஏற்படுத்திய வைராக்கியமே எனது இந்த வெற்றி. அதன் ஞாபகமாகதான் இந்த கம்பெனியில் இப்பவும் தரமான ஊக்குகள் தயாரிக்கிறேன்.
நமது கம்பெனி நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது. அதற்காக உழைத்த உங்கள் அனைவருக்கும் நமது கம்பெனியின் லாபத்தை பிரித்து தருவதற்கான அறிவிப்பு இந்த மீட்டிங் என்று சொன்னார். அதை கேட்ட அனைத்து ஊழியர்கள் மனதில் மகிழ்ச்சியும் முகத்திலும் புன்னகையும் பரவியது.
“என் அன்பான ஊழியர்களுக்கு எல்லாம் நான் கூறுவது ஒன்றுதான் எவ்வளவு உயரத்திற்கு நீங்கள் சென்றாலும் பழசை மறக்காதீர்கள்”
என்று கூறி விடை பெற்றார் சிவராமன்.
முற்றும்.