எழுத்தாளர்: உஷாமுத்துராமன்
80 வயதான மாதவனின் மகன் சிவா அவர் இந்த வேலை விஷயமாக டெல்லி போவதாக தெரிந்து கொண்டார் மாதவன். “சிவா டெல்லிக்கு வேலையை விஷயம் ஆகப் போகிறாயா? என்று கேட்டவுடன் சிவா எரிச்சலாக. “ஆமாம் உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.
“இல்லப்பா டெல்லியில் பூசணி அல்வா மிகவும் அருமையாகவும் சுவையாகவும் இருக்கும் எனக்கு கொஞ்சம் வாங்கிக் கொண்டு வா” என்று அப்பா கேட்டபோது உடனே சிவாவின் மனம் இளங்கியது. இருந்தாலும் “அப்பா உங்களுக்கு சுகர் இருக்கிறது நீங்கள் ஸ்வீட் சாப்பிடலாமா?” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே அவனுடைய மனைவி மாதங்கி அங்கு வந்தாள். “ஆமாங்க என் ஃப்ரெண்ட் கூட சொன்னாள். ஏங்க அப்படி சொல்றீங்க அவர் பாவம் என்ன அத்தனை அல்வாவுமா சாப்பிட போகிறார். நீங்கள் வாங்கிக் கொண்டு வரும் பூசணிக்காய் அல்வாவில் அவருக்கு ஒரு துளி கொடுப்பதால் ஒன்றும் அவருடைய சுகர் ஏறி விடாது ” என்று மனைவி சொன்னாள். தனக்காக பரிந்து பேசிய மருமகளை ஆசையுடன் பாசமான மருமகள் என கனிவுடன் அவளை பார்த்தார் மாதவன். “ஓகே அப்பா கண்டிப்பாக வாங்கி கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பிளேனை பிடிக்க சிவா கிளம்ப மாதவன் “ஜாக்கிரதையாக சென்று வா” என்று அவனுக்கு விடை கொடுத்தார்.
நன்றி