எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
ராதிகா, ஏண்டி ஒரு மாதிரி இருக்கே என்று கேட்டாள் தோழி சரளா. மூன்று நாள் ஆச்சுடி, கான்ஸ்டிபேஷன் பிராப்ளம், வயிறு கல்லு மாதிரி இருக்கிறது என்றாள். இதற்கு போய் ஏண்டி கவலைப்படுறே, இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடு காலையில் ஈசியாக போகும் என்றாள். எனக்குத்தான் வாழைப்பழம் பிடிக்காது என உனக்கு தெரியாதா என்றாள் ராதிகா. டாக்டரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதற்கு, இது இயற்கை மலமிளக்கி, இதை மருந்தாக நினைத்து சாப்பிடு என்றாள். மறுநாள் காலை சரளாவிற்கு ராதிகாவிடமிருந்து போன் வந்தது. என் பாரம் இறங்கிடுச்சுடி வாழைப்பழத்தின் மகிமையை உணர்ந்தேன். தேங்க்ஸ் என்றாள்.
முற்றும்.