எழுத்தாளர்: நா.பா.மீரா
பாரிஜாதம் …. இது என்னம்மா பேரு.. ரொம்ப ஓல்ட் பாஷனா இருக்கு …
உஷ் … ஹரிணி …உங்கப்பா காதுல விழுந்தா அவ்வளோதான் …..
ஏம்மா …கேட்ட மகளிடம் …உங்கப்பாக்கு பாரிஜாதப்பூவுன்னா உசிரு …எம்பேரு பாரிஜாதம்கிறதாலேயே கட்டிக்கிட்டாரு …சொல்லும்போதே வெட்கப்பூச்சு அவள் முகத்தில்.
பவளம் பதிச்சா மாதிரி காம்பு ….சுத்தி ஐந்து இதழ்கள் …தேவலோக சுகந்தம் ….அதுனால பவளமல்லிகைன்னு ஒரு பேரு கூட உண்டு.
ஆறு வயது ஹரிணியின் கண்கள் கனவில் விரிய ..கையில் மொபைலை எடுத்தாள்.
கூகுள் பண்ணாதேடி …. வரவருஷம் முதல்முறையா இந்தியா வரப்போறே இல்லே …அங்க நம்ம ஊரிலேயே பார்க்கலாம் …காத்திருக்கத் தொடங்கியது அந்த பாலைவனக்குயில்.
முற்றும்.