10 வரி போட்டிக் கதை: பால் பால் பசும்பால்

by admin 2
110 views

ராமநாதன் அரசாங்க அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறார்.மிகவும் கோபக்காரர்,கறாரான பேர்வழி. அவரைச் சுற்றி நடக்கும் சிறு தவறுகளைக்கூட மன்னிக்கமாட்டார்.கூச்சல் போட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்வார்.

வீட்டிலும் அதே நிலைதான்.அதனால் மனைவி,மகன்,மகள் எல்லோரும் அவரை விட்டு விலகியே நின்றனர்.

ராமநாதன் தினமும் காலை ஆறு மணிக்கு எழுந்திருந்து, ஆறு முப்பதுக்கு ஹாலில் வந்து அமர்ந்தவுடன், தூய பசும்பாலில் கலக்கப்பட்ட காபி அவர் முன்னால் டீபாயின் மீது வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது எழுதாத விதி.

ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு.அன்று அவர் மனைவி லட்சுமி அம்மாள், அவருக்கு பாக்கெட் பால் காபி கொடுத்துவிட்டார்.அவ்வளவுதான் ராமநாதன் சிவதாண்டவம் ஆடிவிட்டார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை,வழக்கம்போல் ராமநாதன் ஏழு மணிக்கு ஹாலில் வந்து அமர்ந்தார்.லட்சுமி அம்மாள்,  “இன்று பால் இன்னும் வரவில்லை”,என்று கூறியவுடன் ஆரம்பமானது சிவதாண்டவம். 

அப்பொழுது பால்காரன் அவசரமாக  வந்து பால் ஊற்றிச் சென்றான்.காப்பி உடனே தயாரிக்கப்பட்டது.லட்சுமி அம்மாள் அவரிடம் வந்து பயபக்தியோடு கொடுத்தார்.

ஒரு மடக்கு காப்பியைக் குடித்த பின்னே,”ஆகா இதுவல்லவா காபி,லேட்டாக வந்தாலும் இன்றைய காபி பிரமாதம்,” என்று பாராட்டினார்.

சற்று நேரத்திற்கு முன் லட்சுமி அம்மாளுக்கு பால்காரன் “அம்மா இன்று என் பசுமாடு வெறித்துக் கொண்டு, பால் கொடுக்கவில்லை,அதனால் இரண்டு விதமான பாக்கெட் பாலைக் கலந்து கொண்டு வந்துள்ளேன்”, என்பதைக் ரகசியமாக சொன்னான்.

 முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/17130-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!