எழுத்தாளர்: மு.லதா
மனைவி கொடுத்த காபியைப் பருகிக்கொண்டே பால்கனியிலிருந்து
சிக்னலில் நின்றிருந்த வாகனங்களை நோட்டமிட்டான் ரகு.
என்னங்க, என்றபடி அங்கு வந்த மனைவியிடம்,ஜெயா அங்க முதல்ல நிக்கற ஆடிக்காரப்
பாத்தியா..வாங்கினா
கெத்தா இருக்குமில்ல என்றான் கண்களில்
கனவுகளுடன்.
ம்க்கூம்… என்று முகவாயைத் தோளில்
இடித்துக்கொண்டே ஆடித் தள்ளுபடில
ரெண்டு புடவை எடுத்துக் கொடுக்க வக்குல்ல,இதுல துரைக்கு ஆடிக்கார் கேக்குதோ?
டைமாயிடுச்சு ஆஃபீஸ் கிளம்பற வழியப்பாருங்க என்றாள்
கோபத்துடன்.
யதார்த்தம் வலியைக் கொடுத்தாலும்,
அவனது உள்மனம் சொல்லியது;அது ஒருநாள் நடக்கும்,பிரபஞ்சம் அதை நிறைவேற்றும்
என்று நம்பினான்.
படிப்பும்,திறமையும் இருந்தும் வாய்ப்பு
என்னவோ அவனுக்குக் கிடைக்காமலே
இருந்தது.
ஏதோ யோசித்தபடி சாலையைக்
கடக்க முயன்றவனை பிடித்து இழுத்தது
இரண்டு முரட்டுக் கரங்கள்.
அந்த சந்திப்பில் , “முதல் என்னுது,மூளை
உன்னுது” என்றான் அவனது கல்லூரி நண்பண்.
பிரபஞ்சம் அவனது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றத் தொடங்கியது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
