எழுத்தாளர்: தஸ்லிம்
“ப்பா ஒரே வீடு முழுசும் புத்தகமா கிடக்கு. லைப்ரரி தோற்றுப் போயிடும் போல. இதை தொடைச்சு வைக்கவே கைலாம் வலிக்குது. ஒரு மனுஷனுக்கு இத்தனை புத்தகம் எதுக்கு” என்று தன் கணவர் பிரபுவை திட்டிக் கொண்டே அந்த புத்தகளை எல்லாம் துடைத்து கொண்டிருந்தார் சுத்தத்துக்கே சுத்தத்தை பற்றி வகுப்பு எடுக்கும் அவரின் மனைவி பார்வதி.
“நேத்து தான் நான் எல்லாம் துடைச்சு வச்சேன். மறுபடியும் நீ பண்ணினா நான் என்ன செய்யுறது. அது மட்டுமில்லாம, “துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங்” தெரியுமா உனக்கு..
“ஆஹான் அப்படி என்ன ஆயுதத்தை எடுத்து நீங்க குத்தி கிழுச்சுட்டிங்க.. கண்டதையும் படிச்சுட்டு எதையாவது தத்து புத்துன்னு உளற வேண்டியது” என்று எரிச்சலுடன் சொல்ல அதற்கு மேலும் அவளிடம் வாயாடவில்லை அவர்..
அடுத்த வருடத்தில் விபத்தில் அவர் மறைந்து விட அந்த புத்தகங்களே அவளுக்கு துணையாய்.. அவர் நினைவாக ஆரம்பத்தில் அதை சுத்தப்படுத்தி மட்டும் வைத்துக் கொண்டிருந்தவள் பின்னர் அதை படிக்க ஆரம்பிக்க காலப்போக்கில் அவளும் எழுத ஆரம்பித்தாள் பிரபா என்ற பெயரில்.. பிரபு மறைந்தாலும் சரஸ்வதியின் எழுத்து பிரபா என்னும் பெயரில் உயிர் பெற்று நிலைத்து நின்றது..
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
