எழுத்தாளர்: உஷாமுத்துராமன்
கணவன் கட்டிய பெரிய வீட்டை நிஷா அழகாக சுத்தமாக பராமரித்தாள். மழை பெய்தால் சேகரிக்கும் ‘மழை நீர் சேகரிப்பும்’ செய்திருந்தான் கணவன் கமலேஷ்.
கணவன் கூட மேலே ஓடு போட்டு சாய்வாக அமைத்தால் பார்வைக்கு அழகாக இருக்கும் என்று சொன்னதற்கு, திறந்த வெளியாக வைத்து மழை என்றால் எங்கெல்லாம் தண்ணீர் விழுகிறதோ அங்கு எல்லாம் பெரிய பாக்கெட், டிராம் என எல்லாவற்றிலும் பிடித்து விடுவாள் நிஷா.
அவள் மழையில் நனைந்து தண்ணீர் பிடிப்பதை பார்த்த கமலேஷ் ‘அதுதான் நிறைய தண்ணீர் இருக்கும் இல்ல.
எதற்கு இப்படி பிடிக்கிறாய்?’ என்ற சொன்னாலும், ‘மழை தண்ணீர் ரொம்ப சுத்தமாக இருக்கும்.
குளிக்க, துணி துவைக்க பாத்திரம் தேய்க்க பயன் படுத்தினால் பளிச் என்று இருக்கும் இயற்கையாக கிடைக்கும் தண்ணீர்.
வீணாக்கக் கூடாது’ என்று விளக்கிய மனைவியின் ‘தண்ணீர் சிக்கனத்தை பார்த்து வியந்து பாராட்டினான் கணவன் கமலேஷ்.
முற்றும்.