10 வரி போட்டிக் கதை: புதுசு நல்லா இருக்கா?

by admin 2
113 views

‘’அப்பா, என்னோட கண்ணாடி ரொம்ப பழைய மாடல்னு என்
ஃபிரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க. இந்த உடனே மாத்தணும்.
இல்லன்னா நான் காலேஜுக்கு போக மாட்டேன்’’ அடம் பிடித்தான் நகுல்.
அவனது பிடிவாத குணம் அறிந்த ராமன் உடனடியாக பணம்
கொடுத்து “நாளைக்கே கடைக்கு போய் உனக்கு பிடிச்ச டிசைன்ல
கண்ணாடி பிரேம் வாங்கிக்கோ” என்றார். 
 அன்று ராமன் வீட்டிற்குள் நுழைந்ததும், புதுக்கண்ணாடி அணிந்து
முகமெங்கும் பளிச்சிட புன்னகைத்தார் அவரது எழுபது வயதுத்
தந்தை. ” ஆறு மாசமா ஒரு பக்கம் காது அறுந்து போய், கண்ணாடில நூல் கட்டி  மாட்டிக்கிட்டு இருந்தேன். என் பேரன் கிட்ட பணம் கொடுத்து புதுக் கண்ணாடி வாங்கிக்க சொன்னியாம். வாங்கிட்டேன். நல்லா இருக்கா?’’ என்று அவர் கேட்க  ராமனுக்கு முள் குத்தியது போல் இருந்தது. விஷமமாக சிரித்தான் நகுல்.

 முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/17130-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!