எழுத்தாளர்: பிருந்தா
அன்று இலக்கியா தன் தோழிகளுடன் கடைவீதிக்குப் போய் இருந்தாள். அவள் விடுதியில் தங்கிக் கடைசி வருடம் கல்லூரிப் படிப்பைப் படித்துக் கொண்டு இருந்தாள். அனுமதி பெற விடுதி வார்டனிடம் வரும் போதே அவர் கண்டிப்பாகக் கூறி விட்டார். ” நீங்கள் இரவு 8 மணிக்குள் வந்து விட வேண்டும்; இல்லா விட்டால் விடுதியைப் பூட்டி விடுவோம்; உள்ளே வர முடியாது” என்று. இவளும், இவள் அறைத் தோழி நிர்மலாவும் சரி என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்கள். இவள் வகுப்பில் உள்ள ஒரு தோழி சொன்னாள் என்று புது லிப்ஸ்டிக்கை தேடி இருவரும் கடை கடையாய் ஏறி இறங்கியது தான் மிச்சம். இவர்கள் தேடியது கிடைக்கவில்லை. நேரத்தைப் பார்த்தால் இரவு ஏழரை என்று காட்டியது. நாம் அவள் சொன்னாள் என்று நம்பி வந்தது எவ்வளவு தப்பு என்று அரக்கப் பறக்க விடுதிக்குத் திரும்பினார்கள்.
முற்றும்.
