எழுத்தாளர்: சுகந்தி குமார்
அழகான ஒப்பனை மேசையில் கலர் கலரான லிப்ஸ்டிக் குப்பிகள்.
இன்று கூட புது ஆடைக்கு பொருத்தமான ஒரு புது லிப்ஸ்டிக் வாங்கி இருக்கிறாள்.
ரம்யாவுக்கு லிப்ஸ்டிக் என்றால் சின்ன வயதில் இருந்தே ஆசை.
ரம்யா வளர்ந்தது கிராமத்தில், யாரும் லிப்ஸ்டிக் பூசிக் கொள்ள மாட்டார்கள்.
ஏதாவது விசேஷங்களுக்கு ரம்யாவின் அத்தை ஹைதராபாத்தில் இருந்து வரும் பொழுது அவருடைய அழகு சாதனப் பெட்டியில் இருக்கும் லிப்ஸ்டிக்கை பார்த்து பூசிக் கொள்ள ஆசைப்படுவாள்.
ஆனால் கேட்க தயக்கமாக இருக்கும் , எனவே கேட்டதில்லை.
திருமணம் ஆகும் வரை லிப்ஸ்டிக் பூசும் ஆசை தீரவில்லை.
திருமணம் ஆனதும் கணவர் என்ன பரிசு வேண்டும் என்று கேட்டதற்கு எனக்கு ஒரு லிப்ஸ்டிக் வேண்டும் என்றாள்.
அன்றே ரம்யாவின் கணவர் பல கலர்களில் லிப்ஸ்டிக் வாங்கிக் கொண்டு வந்து பரிசு அளித்தார்..
முதன் முதலில் ஆசைப்பட்ட புது. லிப்ஸ்டிக் பரிசாக லிப்ஸ்டிக் கிடைத்தது எவ்வளவு சந்தோஷமாக இருந்து இருக்கும்.
முற்றும்.