எழுத்தாளர்: வெ. முத்துராமகிருஷ்ணன்
பத்தாம் வகுப்பு படிக்கும் வள்ளி தன் அம்மா பாத்திரங்கள் தேய்க்கும் வீட்டிற்கு அம்மாவுடன் சென்றாள் அம்மா பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்க வள்ளி ஒரு நோட்டு வைத்துக் கொண்டு ஏதோ எழுதி கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த அந்த வீட்டுக்கார அம்மா நந்தினி “என்ன செய்கிறாய்?” என்று கேட்க “அக்கா பள்ளிக்கூடத்தில் மூங்கில் பற்றி கட்டுரை எழுத சொன்னார்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னாள் நந்தினி நோட்டை வாங்கிப் பார்க்க அவள் மூங்கில் என்று மட்டும் எழுதி இருந்தாள் உடனே நந்தினி ” மூங்கில் மிகவும் அருமையான மரம் அது எளிதில் வளரும். அதை நம் வீட்டில் சின்னச் செடியாக கூட ஒரு தொட்டியில் வளர்க்கலாம் மூங்கிலிருந்து நாம் கூடை முறம் செய்ய பயன்படும்” என்று நந்தினி பல செய்திகள் சொல்ல வள்ளி சந்தோஷத்துடன் அவள் சொன்னவற்றை அழகாக கட்டுரை வடிவில் எழுதி நந்தினியிடம் காண்பித்தாள். ” அருமை . புத்திசாலி வள்ளி”என்று நந்தினி வள்ளியை பாராட்டினாள்.
நன்றி