10 வரி போட்டிக் கதை: பெல்ட்

by admin 1
32 views

வலிக்குது அண்ணா அடிக்காதீங்க அண்ணா என்று பெல்டினால் அடி வாங்கி கதறிய அவளின் அலறல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. ஆனால் ஒரு சின்ன சத்தம் கூட வெளியே கேட்கவில்லை. அதுபோல் வடிவமைக்கப்பட்ட அறை.

பெல்டால் அடி வாங்கி கதறியவளை ஒத்த ஐந்து பெண்கள் அதே அறையில் மூலையில் பயத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

பெல்டால் அடி வாங்கியவளோ வலி தாங்காமல் அப்படியே மயங்கி விழுந்தாள். அவள் விழுந்ததும் பெல்ட்டை கீழே போட்டுவிட்டு, அவளை தூக்கி பெட்டில் போட்டு தன் காம வெறியை தீர்த்துக் கொண்டான். 

அவன் முடிந்ததும் அடுத்தவன் அச்செயலை தொடங்க, கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்த அப்பெண் தன்னை வெறிகொண்டு சீரழித்துக்கொண்டிருப்பவனைக் கண்டு கண்ணீர் வடித்தாள். 

அன்பே ஆருயிரே என்று காதலித்தவனைப் பற்றி அவன் நல்லவன் போல் இல்லை என்று எச்சரித்த பெற்றோரிடம் இப்போது மானசீகமாக மன்னிப்பு கேட்டு கொண்டாள். 

நல்லது சொன்ன பெற்றோரையும் மீறி கல்லூரியின் முதல் வருடத்திலேயே இவனை காதலித்து கல்யாணம் செய்து அவர்கள் முன் போய் நின்றாள். 

தவமாய் தவமிருந்து பெற்ற மகள் அல்லவா? எப்படியோ எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என்று விட்டுவிட்டார்கள் பெற்றோர்கள். 

கட்டியவனை நம்பி இந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரிந்தது அவனின் சுய உருவம். காதலிக்கும் பொழுது அவனுடன் நண்பன் என்று வந்தவனை அண்ணா என்று அன்புடன் அழைத்தாள். அவனின் கையால்தான் அத்தனை பெல்ட் அடிகளும் வாங்கி மயங்கினாள். இதோ அவன் முடிந்ததும் அவனின் நண்பர்கள் இருவருர் வந்தார்கள் . 

ஊரை விட்டு தனித்திருந்த பண்ணை விட்டில் பெண்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள் அந்த நால்வரும். வாரம் ஒன்று கடக்க மற்ற பெண்களுடன் பேசி இங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா? என்று தெரிந்து கொண்டவளுக்கு, வெளியே இருக்கும் நாயிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. தப்பித்து ஓடிய ஒருவள் கடிவாங்கி படுத்திருப்பதை பார்க்கும் போது. 

அந்த நாயை நம்பியே இந்த கயவர்கள் பெண்களைப் பற்றி பயம் இல்லாமல், வெளியே அடுத்த பெண் கிடைக்கிறாளா என்று பார்க்க சென்று விட்டார்கள். இந்த ஒரு வாரத்திலேயே அந்த நாயைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டாள்.

கதவைத் திறந்ததும் தாவி வரும் நாய், அவர்கள் கையில் இருக்கும் பெட்டை தோளில் போட்டதும் அப்படியே அடங்கிவிடும். அதன் தலையை தடவி கொடுத்தபடியே அதற்கு உணவு அளித்துவிட்டு அவர்கள் வேலையை செய்ய கிளம்புவார்கள். 

இனிமேலும் இந்த நரகத்தில் வாழ முடியாது என்று முடிவு எடுத்தவள். அன்று இரவு இரு ஆண்கள் மட்டும்தான் அங்கு வந்து அவர்கள் தேவை முடிந்ததும் போதையில் உறங்கினார்கள். அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதும் மெதுவாய் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

ஆள் அரவம் கேட்டதும் அவளின் அருகில் பாய்ந்து வந்த நாய் அவள் கையில் இருந்த பெல்ட்டை தோளில் போட்டதும் அப்படியே அமைதியாக நின்றது. அதன் தலையை தடவிக் கொடுத்துவிட்டு அவள் கையில் இருந்த பிஸ்கட்டை போட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள். 

எங்கும் ஒரே இருட்டு. ஒருபக்கம் பாதை போல் தெரிய, வேகமாக ஓடினாள். பாதை முடியும் இடம் சரள் ரோடு வந்தது. அதையும் தாண்டி ஓட ஒரு பைக் வருவது போல் தெரிந்தது. 

வேகமாக வழிமறித்து உதவி கேட்டாள். வந்தவன் அந்த ஊர் பண்ணையாரின் மகன். தன் எதிரில் நிற்கும் பெண்ணின் அலங்கோல நிலையை கண்டு, முதலில் அவளை பாதுகாக்க நினைத்து தங்கள் வீட்டில் விட்டுவிட்டு, காவல்துறைக்கும் தெரியப்படுத்தினான். 

அவள் சொன்ன தகவல் படி அடுத்த அரை மணி நேரத்தில் காவல் துறையினர் அங்கிருந்த இருவரையும் கைது செய்து மற்ற பெண்களையும் காப்பாற்றினார்கள். 

காட்டு தீ போல் செய்தி பரவி, கொந்தளித்தது சமூகம். அப்பெண்களின் வீட்டிற்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. தங்கள் வீட்டில் தங்க தட்டில் தாங்கிய தன் மகள், இப்படி எவனோ ஒருவன் கையில் பெல்ட்டினால் அடி வாங்கி, கிழிந்த நாராக கிடக்கும் மகளைக் கண்டு கண்ணீர் சிந்தினர் பெற்றோர்கள். 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!