எழுத்தாளர்: சுகந்தி குமார்
வீட்டுக்கு வருபவர்கள் அனைவரும் விரும்பி பார்த்து விவரம் கேட்கும் அறை இது.இந்த அறையை தினமும் சுத்தப் படுத்தி பூஜை அறை மாதிரி பாதுகாக்கிறீர்களே ?
ஆமாம் , இது எனக்கு பிரியமான , ஈடு இணையற்ற பொக்கிஷம்.
எதனால் என்று கேட்டால் இது என் தந்தை யின் அறை.
அது மட்டுமல்லாமல் வழக்கறிஞராக இருந்த என் தாத்தா வின் அறையாகவும் இருந்ததால் என் தந்தைக்கும் இது ஒரு பொக்கிஷம்.என் தந்தை ஒரு ஆதர்ச ஆசிரியரியராக இருந்தார். எத்தனை வருட அனுபவம் இருப்பினும் தினமும் படித்து தன்னை தயார் பண்ணிக் கொண்டால் தான் ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்க முடியும் என்று சொல்வது மட்டும் அல்லாமல் அதை கடைசி வரை கடை பிடித்தவர் என் தந்தை. . இந்த நாற்காலியில் அமர்ந்து தான் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை கழித்தார். இவை அனைத்தும் அவர்கள் இருவரும் பார்த்து பார்த்து வாங்கிச் சேர்த்த புத்தகங்கள்.
என் மகனுக்கும் அருமை நண்பராக இருந்த தன் தாத்தாவை அதிகமாக நேசிப்பதால். அவனும் பொக்கிஷமாகவே பாது காப்பான் என்ற நம்பிக்கையில் நான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
