எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன்
சுட்டிப் பையன் ராமு, தன் அப்பாவுடன் காரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் சிக்னல் விளக்கு ‘போகலாம் ‘என்று பச்சை நிறம் காட்டியது. சிறிது தூரம் செல்வதற்குள் சிகப்பு நிறம் எறியத் தொடங்கியது. பாதி தூரம் சென்றவர்கள் தடுமாறி நின்றனர்.
சிறிது நேரத்தில் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பார்த்துக் கொண்டிருந்த டிராபிக் இன்ஸ்பெக்டர் உடனே அந்த இடத்திற்கு வந்து போக்குவரத்தை அரசு செய்து விபத்து நேராமல் வழி நடத்தினார்.
அன்று பள்ளியில் ‘ மாணவர்களை வழி நடத்த வழி முறைகள்’ பற்றிய பேச்சுப் போட்டி. அன்று சாலையில் டிராபிக் விளக்கு பழுதானதால் ஏற்பட்ட குழப்பம், அதை டிராபிக் கான்ஸடபிள் எப்படி வழி நடத்தினார் என்று ராமு கூறி ஒவ்வொரு மாணவனுக்கும் பள்ளியில் ஆசிரியரும், வீட்டில் பெற்றோரும் வழி நடத்த அவசியம் தேவை.
ஒன்று பழுதானால் மற்றொன்று வழி நடத்தும். வாழ்க்கை எனும் வண்டி பாதுகாப்புடன் செல்ல நடத்துனரும் ஓட்டுனரும் போல நல்லாசிரியர்களும் பெற்றோர்களும் தேவை என பேசி கைத்தட்டலைப் பெற்றான் ராமு.
முற்றும்.