10 வரி போட்டிக் கதை: போதிமரப் பூச்சி

by admin 1
30 views

எழுத்தாளர்: வாசவி சாமிநாதன்

தாய் தந்தை உறவு என்று யாரும் இல்லாமல் தனிமையில் இருப்பது எண்ணி அழத் தொடங்கினாள் அறிவியல் ஆசிரியர் ஹேமா.

ஒரு வார காலமாக மனஅழுத்தத்திற்கு தீர்வு தன்னை மாய்த்துக் கொள்வது என்று எண்ணி

தனது கடமையை முடித்து விட்டு இரவு நேரம் நடத்திட திட்டமிட்டாள்.

வழக்கம்போல் பள்ளிக்கு சென்று  தலை துண்டித்த பின்பும் உயிர்வாழக்கூடிய, வெகுதூரம் விரைவாக ஓடக்கூடிய கரப்பான் பூச்சி படம் வரைந்து பாகங்களை குறித்து விளக்கம் கூறி பாடம் நடத்தினாள்.

மாலை நேரம் மையல் கொள்ள ஆரம்பித்ததும் வீடு திரும்பியவள்

கதவை திறந்ததும் அழுகை குபுக்கென்று வந்தது.

உடலமைப்பையும் நிறத்தையும் குறைக் கூறி நிராகரித்தை எண்ணி

அழத் தொடங்கினாள் .

சட்டென்று விழித்தவளுக்கு காலை அவள் நடத்திய

“தலைதுண்டித்த பின்னும் உயிர்வாழும் கரப்பான் பூச்சி ” பாட வரி மனதை மாற்றியது

உயிரை மாய்த்துக் கொள்வது சரியான வழிகாட்டல் முறையில்லை என நினைத்தாள்.

தன்னை நிராகரித்தவனுக்கு பதிலடி வாழ்ந்து காட்டுவது தான்

முடிவு செய்தாள்.

பிரச்சனைக்கு தீர்வு அழிந்து போவதல்ல ;எதிர்த்து போராடுவது தான் என்பதை உணர்ந்தாள்.

தெளிவு பிறந்த மனதுடன்  வீட்டில் அடையும் கரப்பான் பூச்சியாக அல்ல, விண்ணில் பறக்கும் வண்ணத்துப் பூச்சியாய் மாறினாள்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!