எழுத்தாளர்: நா.பா.மீரா
முழு போதையில் நுழைந்த கணவனை வெறுப்பு கக்கும் பார்வையுடன் லீலாவதி நோக்க
ஹேய் என்னடி பார்வை?
ஆசுபத்திரிக்குச் செல்ல கடன் வாங்கி வைத்திருந்த பணம் கணவன் அஜீத்தின் கழுகுப் பார்வையில் தப்பாமல் விழ பிடுங்க முயற்சித்தான்.
டேய் பாவி அது ஆசுபத்திரிக்குப் போக கடன் வாங்கி வச்சிருக்கிற பணம்டா தடுக்க வந்த தாயைத் தள்ளிவிட
லீலாவதி அதிர்ச்சியில் மயங்க எட்டி விழுந்த வேகத்தில் கண்ட காட்சியில் உறைந்த தாய்….
அதிகமான உதிரப்போக்கால் கரைந்து அழிந்த நான்கே வார சிசு
மறுநாள் அவன் போதை தெளிந்தது மூன்று உயிர்களைக் குடித்த அகோரப் பசி தணிந்ததில்.
முற்றும்.