எழுத்தாளர்: தஸ்லிம்
மூன்று மணிக்கே தூக்கம் கலைந்து எழுந்த மணி நிதானமாக குளித்து டிப் டாப்பாக உடை அணிந்து அறையில் இருந்து வெளியில் வந்தவனுக்கு அவன் அம்மா விபூதி பூசி விட்டு, “இந்த வேலையாவது உனக்கு கிடைச்சுரணும்” என்று சொல்ல.
“கவலையே படாதம்மா. கண்டிப்பா கிடைக்கும். எட்டு மணிக்கு தான் இன்டர்வியூ.. ஆனா பாரு நான் ஆறு மணிக்கே போயிடுவேன். என் பன்க்குசுவாலிட்டிய பார்த்தே எனக்கு வேலை தந்துடுவாங்க” என்று நம்பிக்கையுடன் சொல்லி விட்டு கிளம்பினான்..
அங்கு சென்று பார்த்த போது அந்த அலுவலகமே வெறிச்சோடிக் கிடந்தது. வாயிலில் நின்ற காவலாலியிடம், “என்ன அண்ணே இன்டர்வியூன்னு சொன்னாங்க. ஒருத்தரையும் காணோம். நான் தான் ஃபர்ஸ்ட்டா” என்று பெருமையுடன் கேக்க.. அவனை ஏற இறங்க பார்த்தவர், “இன்டர்வியூ எல்லம் முடிஞ்சு எல்லாரும் கிளம்பியே போயாச்சு.. காலைல உள்ள இன்டர்வியூக்கு சாயந்திரம் வந்திருக்கிற” என்று அவனை இகழ்ச்சியுடன் கேட்க..
அவனோ, “என்னது காலையில இன்டர்வியூவா?” என்று அவரை அதிர்வுடன் நோக்கியபடி “மணி.. மணியை பார்க்க தவறிட்டியே மணி” என்று தன் மனதில் தன்னையே நொந்து கொண்டு சோகத்துடன் அங்கிருந்து கிளம்பினான்..
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
