எழுத்தாளர்: ஷா.காதர் கனி
“அம்மா! வண்டி வந்துருச்சு கொஞ்சம் சீக்கிரமா எடுத்து வை மா” என்று சொன்ன
ராஜாவிடம் அம்மா இதோ முடிஞ்சிடுச்சுடா; அவ்வளவுதான்; இந்த பெட்டி தான்
கடைசி என்று பெட்டியை திறந்து பொருள்களை சரி பார்த்தாள். ஒரு வழியாக
அனைத்து பொருட்களையும் வண்டியில் ஏற்றியபின் அம்மாவின் முகம் வாடியே
இருந்தது. கவனித்துக் கொண்ட ராஜா, அம்மா கவலைப்படாதம்மா! புதுசாவா வீடு
மாறுகிறோம் அடுத்த தெருவுக்கு தானே போறோம் … என்று சொன்ன மகனுக்குத்
தெரியாது அம்மாவின் கவலை அந்த பெட்டியில் இருந்த இறந்து போன தன்
கணவரின் தொப்பியை பார்த்த மனதின் கணம் என்று.
முற்றும்.
