எழுத்தாளர்: சஞ்சனா
“ஏன் பாத்ரூம் இப்படி நாறுது?கிளீன் பண்ண ஆள் இல்லையா? “என்று கத்தி கொண்டு இருந்தான் வாசு..
“இல்லைங்க சாந்திக்கு உடம்பு சரியில்லை. ஒரு வாரமா வேலைக்கு வரலை.எனக்கும் இந்த வாரம் முழுக்க ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு..” என்றாள் வாசுவின் மனைவி காயத்ரி..
” எப்பவும் சாந்தி வரலைனா அவங்க பொண்ணு வருமே..அதை வந்து செய்ய சொல்லலாம்ல ” என்றான் வாசு..
“இல்லைங்க அந்த பெண்ணுக்கு இந்த வாரம் பரிட்சை இருக்கு..வர முடியாது..”
” ஏன் அந்த பொண்ணு படிச்சு கலெக்டராக போகுதா ?வந்து செய்ய சொல்லு இல்லைனா வேலைய விட்டு நிறுத்த போறன்னு சொல்லு..தன்னால வருவாங்க..”என்றான் வாசு..
“இப்படி உங்க அப்பா உடைய முதலாளி நினைச்சு நீங்க படிக்க பண உதவி செய்யாம இருந்து இருந்தா நீங்க பாத்ரூம் தான் கழுவிட்டு இருந்திருப்பிங்க…படிக்க உதவி செய்யலானா கூட பரவாயில்லை..இப்படி கெடுக்க கூடாது.மனசை சுத்தமா வெச்சுக்கங்க முதல்ல..அப்புறம் பாத்ரூம் பத்தி பேசலாம்” என்றபடி நகர்ந்தாள் காயத்ரி..
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
