எழுத்தாளர்: பாக்கியலட்சுமி
வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திப்பது சகஜம், ஆனால் தோல்விகளே
வாழ்க்கையானால் என்ன செய்வது என்று வெறுத்துப் போய் கடற்கரைக்கு
வந்தாள் மீனா.
கடற்கரையில் பல குழந்தைகள் மகிழ்ச்சியாக அலைகளுடன் விளையாடிக்
கொண்டு இருந்தனர்.
காலையில் மாமியார் திட்டியது நினைவுக்கு வந்தது. கல்யாணம் ஆகி 15
வருடங்கள் ஓடி விட்டது. இன்னும் குழந்தை இல்லாது குறையாக
பெண்களிடம் மட்டுமே பார்க்கும் பார்வை இந்த யுகத்திலும்
குறையவில்லை என்ன செய்வது.
கவலைப்படுவதற்கு காரணங்கள் ஒன்றா? இரண்டா? பணியிடத்திலும் சரி
குடும்ப வாழ்விலும் சரி எதுவுமே பல காலமாக தோல்வி மட்டுமே
துணையாக.
கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் மீனா . கரையைத்
தேடி மீண்டும் மீண்டும் அதன் முயற்சியை விடாத விக்கிரமாதித்தனாய்
அலை வந்து கொண்டே இருந்தது.
அலைகளைப் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்த மீனாவின் மனம்
தெளிவு பெற்றது.
தினமும் அற்புதம் நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பதை விட
முயற்சி என்னும் அற்புத விளைக்கை நாம் விடாது பற்றி இருந்தால்
வாழ்க்கை மாறும்
அப்படி மாறாமல் இருந்தாலும் முயற்சித்துத் தோற்ற ஒரு மனநிறைவு
இருக்கும்.
அலைகள் சொல்லித் தந்த பாடத்துடன் வீட்டை நோக்கி நடந்தாள் மீனா.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
