10 வரி போட்டிக் கதை: மலிவு  விலை

by admin
65 views

எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் 

ஏய் ஸ்ரீ சீக்கிரமாக வாடி நமக்கு ஒரு லக் அடித்து இருக்கிறது” என. ஸ்ருதி கல்லூரியின் இடைவேளையின் போது அழைக்க ஸ்ரீநிதி வந்தாள் .

ஸ்ருதி “ ஸ்ரீ நம்ம காலேஜ் பக்கத்தில் புது கடை ஒன்று திறந்து இருக்கிறது. எல்லாம் மேக்கப் பொருட்கள் ரொம்ப மலிவாக கிடைக்கிறது நம்ம காலேஜ் பெண்ணுங்க வாங்க போகிறாங்க வா நம்மளும் வாங்கலாம்” என்றாள்.

ஸ்ரீநிதி “ உனக்கு தெரியும் தானே என் அம்மா, பாட்டி பற்றி மஞ்சள், கடலைமா, பயறு இதை தவிர இந்த மேக்கப் பொருட்கள் எதையுமே தொட விட மாட்டாங்க. அதுவும் அம்மா துடைப்பம் பிய்ந்து போகும் அளவுக்கு இதை தொட்டால் அடிப்பாங்க நீ போய் வாடி” என்றாள்.

ஸ்ருதி “ ஏய் இந்த காலேஜ்க்கு சேர்ந்த நாளாக இப்படி தான் சொல்கிற பாரு எப்படி வந்த. பெண்ணுங்க எல்லாம் மாடர்னாக மாறி விட்டாங்க நீ பட்டிக்காடா இரு சரி இரு நான் போய் வாங்கி வருகிறேன் என கிளம்பினாள்.

ஸ்ருதி வாங்க வந்த பொருட்கள் எல்லாம் ஒரு பொருளுக்கு இரண்டு இலவசமாக இருந்தது. அதுவும் பிங் நிற உதட்டுசாயம் ஸ்ரீநிதியை கவர அவள் அம்மாவை எப்படியும் தாஜா செய்து இதை நாளை வாங்க வேணும் என நினைத்தாள்.

வீட்டுக்கு வந்தவள் தாய் கமலாவிடம் மலிவு கடை பற்றி சொல்லி காசு கேட்க கமலா “ இலவசம் என்பது. கண் துடைப்பு பாப்பா அது எல்லாம் உனக்கு வேணாம் அதில் ஆபத்து இருக்கும் நீ இயற்கை பொருட்களை பாவி அம்மா சொல்வது உன் நன்மைக்கு என்றார்.

மறுநாள் ஸ்ருதி மட்டுமல்ல காலேஜ்ஜில் பாதி பெண்ணுங்க இந்த இலவச மேக்கப் பொருட்களை பாவித்து அழகிகளாக வர. ஸ்ரீ மனதில் நாளை அப்பா லீவுக்கு வருகிறார் அவரிடம் காசு கேட்டால் அள்ளி தருவார் இதை நானும் வாங்க வேணும் என நினைத்தாள்.

அன்று வெளியூரில் வேலை செய்யும் குமார் வர ஸ்ரீநிதி தந்தையிடம் கண்களை கசக்க. ஒரேய மகள் தந்தையின் உயிர் கேட்கவா வேணும் கமலா தன் தாயின் பேச்சை மீறி பணத்தை அதிகமாக கொடுத்தார்.

மறுநாள் சந்தோஷமாக ஸ்ரீநிதி மேக்கப் பொருள் வாங்க வந்தவள் ஏமாற்றம் அடைந்தாள். காரணம் கடை மூடி இருந்தது சரி நாளை பார்க்கலாம் என நினைத்தவள் காலேஜ் முடிய வீட்டுக்கு வந்தாள்.

மறுநாள் காலேஜ் வந்த ஸ்ருதி மற்றும் மற்ற பெண்கள் முகத்தை, உதட்டை பார்க்க முடிவில்லை. காரணம் மலிவு விலை தன் வேலையை காட்டி இருந்தது. முகத்தில் அலர்ஜி திட்டுக்கள் ,உதடு வீங்கி என இருந்தது அது தான் கடையை காலி பண்ணி விட்டனர். ஸ்ரீநிதி மனதில் நல்ல காலம் அம்மாவால் நான் தப்பி விட்டேன் என நினைத்தாள்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!