10 வரி போட்டிக் கதை: மாய போதை

by admin 1
47 views

எழுத்தாளர்: மலையரசன்

மேன்சனில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதெல்லாம்
அநாகரீகம் தான் !
ஆறு மாத வாடகை தராமல் இருப்பது அயோக்கியத்தனம் என்பதால் …
மெரினா தன்னை அன்புடன் வரவேற்கிறது. அங்கேயும் கண்ணகி அவனை
வெளியே போ என சொல்கிறாள் !

அந்திசாயும் நேரத்தில் கடல் அலைகள்  காலை நனைக்க ஒரு அற்புத
விளக்கும் அகப்படுகிறது .
அவன் எதிர்பார்த்தப்படியே எடுத்து தேய்க்க ஒரு மாயக்கன்னி
வெளிப்படுகிறாள் .
கிழிந்த வலைகளைக் கொண்டு உடலை மறைத்த  அவளோ ” பிரபு நான்
உங்கள் அடிமை” என்று மண்டியிடுகிறாள் .
ஈரம் படாமல் , காயம் படாமல் , என்னை வைத்தால் நான் காலம் முழுதும்
உங்களுடன் இருப்பேன்
 அவனுக்கு இது ஒரு மாய போதை  அவன் உள்ளங்கையில் அந்த
முகத்தை கையில் ஏந்தி கொள்கிறான்.
அவள் செவ்விதழை அவன் ருசித்த போது ஒரு பேரலை அவளை வந்து
இழுத்துச் சென்றது .
அடுத்த நாள் காலை அவன் வாயிலிருந்து நுரை தள்ளி கடற்கரை ஓரத்தில்
சடலமாய் கிடக்கிறான் .

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!