எழுத்தாளர்: நா.பா.மீரா
பனி கொட்டும் ரம்யமான அதிகாலைப்பொழுது . கிருஷ்ணன் கோயில் தேரோட்டம் …..
மாலினியின் கைவண்ணத்தில் புள்ளிகளும் இணைத்த கோடுகளும் வண்ணங்களும் தெறிக்க தேர்க்கோலம் அருமையாக வந்திருந்தது.
அவள் போடும் கோலத்திற்கு அந்தத் தெரு முழுவதும் விசிறிகள் இருந்தனர்.
கைகள் சற்றே விரைத்தாலும் மனம் குளிர ஒருமுறை திருப்தியாய் ஏறிட்டவள்
குளித்து முடித்து பாவை நோன்பிற்கான பூஜை தொடங்கினாள் மாலினி.
வாயிலில் நான் கோலமிட்டு மகிழும் தேரில் கண்ணன் என் மணாளனாக மாலையிடும் வேளை எப்பொழுதோ?—கேள்வியாய் அரற்றினாள் .
விழிகள் திறந்த அந்த ஊமைக் குயிலின் முன் காருண்யம் ததும்பும் விழிகளுடன் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியவள் வீற்றிருந்த படம் .
முற்றும்.