எழுத்தாளர்: ராஜேஷ்வர்
இருள்சூழ்ந்த அந்த வனாந்தரத்தில், விடாது பெய்துகொண்டிருக்கும் பேய் மழைக்கு
கிட்டத்தட்ட அவர்கள், ‘உறைந்து, கரைத்து’ விடும்படியாக இருந்தனர்.
அவள்: இந்த மின்னலுக்கு பூக்கின்ற காளான்கள், வியப்பல்லவா? (நடுங்கியபடி கேட்கிறாள்)
அவன்: இதிலென்ன வியப்பு? (அவனும் நடுக்கத்தின் உச்சத்தில் வினவினான்)
அவள்: ஆம், மின்னலுக்கு பூக்கின்ற காளான்களை போல், மற்ற மலர்களும் மலர்ந்தால்?
அவன்: மின்னலுக்கு பூக்கின்ற மலர்கள்?!
அவள்: ஆம்!
மழை வேகமெடுத்தது, அவர்கள் தாழ்வான இடத்திலிருந்து, ஒரு சிறிய கரடின் மேல் ஏறி
நின்றனர். அவள் கிட்டத்தட்ட குளிரில் விறைத்து, கண்களை மூடினாள்.
அவன்: மின்னலுக்கு தான் மலர்கள் பூக்க வேண்டுமா, அவைகள் பூத்துக்குலுங்க உன் பார்வை
போதாதா?!
அவள் கண்களை திறப்பதற்கும், அந்த மலைச் சரிவில் வண்ணப்பூக்கள்
பூத்துக்கிடக்கவும்,சரியாக இருந்தது.
அவள் புன்னகைத்தாள்! அவனும்!
முற்றும்.