எழுத்தாளர்: அ. கௌரி சங்கர்
விரிந்து படர்ந்த கடற்கரையையொட்டி, வரி வரியாக வளர்ந்து நின்ற நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் வானை தொட்டுவிடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தன.
அருகில் ஒரு சிறிய மலை முகடு. அதன் விளிம்பில் தன்னை மறந்து அமர்ந்து இருந்தாள் பூங்குழலி. சிறிது தூரத்தில் நின்று கொண்டு இருந்தான் வந்தியத்தேவன்.
அவள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தது – சில நொடிகளில் தோன்றும் கொள்ளிவாய்ப்பிசாசுகளை . அவளுக்கு மிகவும் பிடித்தவர்கள் அவர்கள். பல வருடங்களாக அவள் நேசித்து வருகிறாள்.
வந்தியத்தேவன் கேட்டான்: “குழலி, மழை வருமோ என்ற இந்த நிலையில், அங்கும் இங்கும் நெளிந்து வளையும் மின்னல்களில் இருந்து மின்னல் பூக்கள் விழுந்தால் எப்படி இருக்கும் ?”
குழலி சொன்னாள்: “அவற்றை ஒன்றுவிடாமல் பொறுக்குவேன். வாழை நாரில் தொடுத்து, உண்ணாமலை நாச்சியாருக்கு மாலையாக சூட்டுவேன். மனம் மகிழ்வேன்.”
முற்றும்.