எழுத்தாளர்: உஷாமுத்துராமன்
நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து வந்த கொண்டு மழை வருவது போல பயமுறுத்தியது. பாட்டியிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த தீபா “பாட்டி மழை வரும் போல இருக்கிறது” என்று சொல்வதற்கு ஒரு சடசடவென்று மழை பெய்ய ஆரம்பித்து மின்னல் பளீரென வீச மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள டமால் டமால் என்று இடி சத்தம் கேட்டது. தீபா பயந்து கொண்டு பாட்டியை கட்டிக்கொள்ள பாட்டி “பயப்படாதே அர்ஜுனா… அர்ஜுனா….. என்று சொல் பயமெல்லாமல் போய்விடும் இடியும் நின்று விடும்” என்று சொல்ல குழந்தை பாட்டி சொன்னதை வேதவாக்காக “அர்ஜுனா….. அர்ஜுனா….” என்று சொல்ல இடி நின்று மழை வேகமாக ஆரம்பித்தது. “ஏன் பாட்டி அர்ஜுனா என்று சொல்ல சொல்கிறாய்?” என்று கேட்டதற்கு “அர்ஜுனன் வீரத்தில் சிறந்தவன் அவனை பார்த்தால் மழை இடி கூட பயப்படும் அதனால் தான் அப்படி சொல்ல சொன்னேன் ” என்று சொல்லி பேத்தியை அணைத்துக் கொண்டு மழையை ரசித்தாள் பாட்டி
நன்றி