எழுத்தாளர்: நா.பா.மீரா
வயநாடு..இயற்கைச் சீற்றத்தின் கோரத் தாண்டவம்….அகோரப் பசி போலும்.. தோண்டத் தோண்ட எண்ணிலடங்கா உயிர்கள் .
காவ்யா ,கணவன் காமேஷ் மற்றும் ஐந்தே வயது இரட்டைக் குழந்தைகள்….பீதியில் உறைந்திருக்க …. நம்மைக் காப்பாற்றிவிடுவார்களா?
அதே சமயம்… பக்கத்தில் ஒரு குழந்தையின் வீறிடல் சத்தம் …. பக்கத்து வீடு பாமாவின் குழந்தை போலிருக்கிறதே? பாமா என்னவானாள்? அவளுக்கு நம்மைக் கண்டால் அறவே பிடிக்காது ..
நிலச்சரிவின் வீரியம் அதிகரிக்க …. தங்கள் குடும்பம் பிழைப்பது கடினம் எனப் புரிந்து போனது காவ்யாவுக்கு .எதிர்ப்புறம் மீட்புப்பணியினர்…. காவ்யா மின்னல் வேகத்தில் செயல்பட … மீட்புப் பணியினரின் கையில் பாமாவின் குழந்தை .
முற்றும்.