எழுத்தாளர்: சி.சினேகா
ஆருத் அலாவுதீன் விளக்கு ஒன்றை பார்த்தான். பார்த்தவுடன் அதை வீட்டிற்கு கொண்டு செல்ல நினைத்தான். ஆனால் அதை எவ்வளவு நகர்த்தியும் நகர்த்தவே முடியவில்லை. அதிலிருந்து தேவதை வெளிவந்தது. உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது. “எனக்கு நிறைய நிறைய சாக்லேட்” வேணும் என்று கூறினான் ஆருத். “சரி தருகிறேன்” என்று அந்த தேவதை கூறியவுடன் சாக்லேட் மழைப் போல் பொழிந்தது. அந்நேரம் சூரியன் கடலுக்குள் மூழ்கும் மாலை நேரம் ஆருத் கூப்பிட கூப்பிட திரும்பிப் பார்த்துக் கொண்டே அந்த தேவதை விளக்கிற்க்குள் சென்றது. ஆருத் தூக்கத்திலிருந்து விழித்தான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
