எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
அகிலாவிற்கு கண்ணனுடன் இனிதே திருமணம் நடந்தது. முதல் இரவு அறையில் அகிலா கண்ணனிடம் உங்களை முதன்முதலில் பார்த்த பொழுதே உங்கள் அழகில் மயங்கி விட்டேன் என்றாள். கண்ணன் சட்டையை கழட்டினான். அவன் நெஞ்சில் கழுகு பச்சை குத்தப்பட்டிருந்தது. கழுகு என்றால் அகிலாவிற்கு பயம். என் அருகில் வராதீர்கள் என கத்தினாள். உடனே கண்ணன் திரும்பி இப்போது பார் என்றான். உனக்கு கழுகு பிடிக்காது என தெரிந்து கொண்டுதான், இந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டேன். இது பச்சை குத்தியது போல் இருக்கும். இப்படியா பயப்படுவாய் என்றான். அகிலா கண்ணனை இழுத்து அணைத்துக் கொண்டாள்
முற்றும்.
