எழுத்தாளர்: தி.கிருஷ்ணமூர்த்தி
ஏங்க, உங்க பையன் இவ்வளவு மார்க் குறைவா வாங்கியிருக்கான்.அவனை நாலு போடு போட்டு “ஏன்டா மார்க் குறைஞ்சது, ரேங்க் எப்டி போச்சுன்னு கண்டிக்காம அவன்கிட்ட தன்மையா பேசிக்கிட்டிருக்கீங்க” கோபத்தில் கொந்தளித்தாள் மனைவி ராஜி.
டேய், நீ வெளிய போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வா என்று பையனை அனுப்பி விட்டு மனைவியிடம் பேச ஆரம்பித்தான் கணவன் கண்ணன்.
“பையனை பெல்ட்டாலே அடிச்சா அவனுக்கு முரட்டுத்தனம்தான் அதிகமாகும். எங்கப்பா என்னை சின்ன வயசுலே சின்ன விஷயத்துக்குக்கூட அடி வெளுத்து வாங்குவாரு, அதனால எனக்கு முரட்டுத்தனம் அதிகமாகி படிப்புலே ஈடுபாடு இல்லாம போயிடுச்சி. நம்ம பையனும் அப்படி ஆகணுமா?பயம்ங்கிறது அவனுக்கு என் கண்ணைப் பாத்தாலே வரணும். அடியாலே திருத்தக் கூடாது, அன்பாலேயும், கண்டிப்பாலேயும் திருத்தணும். சரியா என்று கேட்டவனை பிரமிப்பாக பார்த்தாள் ராஜி.
முற்றும்.