எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
ஒரு ஏக்கர் சுற்றியுள்ள மூங்கில் காட்டில் தனக்குத் தேவையான மூங்கிலை தேடி சுற்றிக் கொண்டிருந்தான் ரகு.
அவனது தாத்தா இந்த மூங்கில் காட்டை உருவாக்கினார்.
அதன் பிறகு அவரது அப்பாவின் காலத்தில் இக்காடு மிகவும் பிரபலமாகிவிட்டது. ஆம் அவனது அப்பாவும் தாத்தாவும் புல்லாங்குழல் செய்வதில் நிபுணர்கள்.
இப்பொழுது அவனது தாத்தா வளர்த்த மூங்கில் காட்டில் புல்லாங்குழலுக்காக மூங்கில்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றான் ரகு.
அவனது காதலி தனக்காக ஒரு புல்லாங்குழல் செய்து தருவாயா? என்று கேட்டதற்காக ஒரு மணி நேரமாக அக்காட்டையே சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறான்.
இதோ அவனுக்கு பிடித்தமான மூங்கிலும் கிடைக்க, அதை எடுத்து வந்து அவனே புல்லாங்குழல் செய்தான்.
அழகாய் பரிசு பெட்டியில் வைத்து தன் காதலியை பார்க்க கிளம்பினான், அவளுக்காக தன் கையால் செய்த புல்லாங்குழலை பரிசாக கொடுக்க.
முற்றும்.