எழுத்தாளர்: தி.கிருஷ்ணமூர்த்தி
நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த உமா திடீரென்று கண் விழித்தாள்.கடவுளே, மணி எட்டரை ஆயிடுச்சு, குழந்தைகளை ஸ்கூலுக்கும், புருஷனை வேலைக்கும் அனுப்பணுமே.பீரியட்ஸ் வலியாலே இடுப்பும், வயிறும் வலி பின்னி எடுக்குது. சரி எந்திரிச்சிப் போயி புருஷன்கிட்டே சொல்லுவோம்.என்றபடி எழுந்து நின்றவளைபுருஷன் சேகர்”இதோ பாரு உமா, மாசத்துல இருவத்தேழு நாளு எங்களை நீ தாங்கிப் பிடிக்கிறே. இந்த மூணு நாளு நான் உனக்கு சேவை செய்றேன்.மாதவிடாய் வலிங்கிறது ஒவ்வொரு பொண்ணும் மாசாமாசம் சந்திக்கிற கொடுமையான வேதனை. உன்னோட வலியை என்னால உணர முடியுது.நான் டிபன் ரெடி பண்ணிட்டேன், குழந்தைகளையும் சாப்பிட வைச்சு ரெடி பண்ணிட்டேன்.இந்த இந்த காப்பிய குடி. இனிமே மாதவிடாய்ல உனக்கு சேவை செய்யப் போறதோட ஆரம்பமா இந்த “மாதவிடாய்ல கோப்பை” காப்பிய தர்ரேன். சரியா டார்லிங் என்றவனை நெகிழ்ச்சியோடு உமா கட்டி அணைத்தாள்.
முற்றும்.