10 வரி போட்டிக் கதை: மோட்டார் சைக்கிள்

by admin 2
41 views

1. “அப்பா எனக்கு ஒரு டூவீலர் வாங்கி தாப்பா” என்றான் மிதுன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன்.

2. வாங்கலாம்பா இன்னும் ஒரு வருஷம் காலேஜ் முடியட்டும் வாங்கலாம்” என்றார் அப்பா.

3. ” அப்பா சொன்னா சரியா இருக்கும் மிதுன், ஆசையா இருந்தா அப்பா வண்டிய ஓட்ற இல்ல, சொன்னா கேளு ” என்றாள் அம்மா.

4. “அம்மா, நா காலேஜுக்கு எடுத்து போக மாட்டேன் மா, அப்பா ப்ளீஸ் இங்க லோகல்ல மட்டும்தான் ப்ளீஸ் பா” என பலநாட்கள் கெஞ்சி சம்மதிக்க வைத்தான் மிதுன்.

5. ஒரு நல்ல நாளில் அவன் ஆசைப்பட்ட புது வண்டி வாசலில் நிற்க ” மிதுன் வா எல்லோரும் கோயிலுக்கு போய்ட்டு வருவோம்” என புறப்பட்டனர்.

6. அப்பா வேலைக்கு செல்ல, மிதுன் ரவுண்ட் செல்ல என மிகுந்த சந்தோஷமாக சுமுகமாக ஓடியது.

7. காலம் உருண்டோட மிதுன் நல்ல உத்யோகத்தில் இருப்பதால் வீட்டில் பைக், கார் என நல்ல வசதி வாய்ப்போடு இருக்கிறான்.

8. இருப்பினும் முதல் முதலாய் அப்பா தனக்கு வாங்கிக் கொடுத்த பைக் இன்னும் வைத்திருக்கிறான்.

9. அந்த வண்டியை பார்க்கும் போது அப்பா, அம்மாவோடு நடந்த உரையாடல்கள் அனைத்தும் நீங்காத நினைவுகளாய் மிதுனைச் சுற்றி வட்டமிடும்.

10. மிதுன்க்கு அந்த வண்டியின் அருகில் நிற்கும் போது அம்மா, அப்பா அருகில் இருப்பதான உணர்வால் உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கும்.

நன்றி  

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!