10 வரி போட்டிக் கதை: யாரோ இவன்

by admin 2
49 views

விபத்தில் உங்களது மகன் குமரன் மூளைச் சாவு அடைந்து விட்டான் என்று மருத்துவர் அவசர சிகிச்சை அறையின் வெளியே நின்றிருந்த கமலம் கண்ணன் இருவரிடமும் கூறினார். அவர் கூறியதை கேட்ட அவனின் பெற்றோரான இருவரும் அதிர்ந்து விட்டனர். 

அதேசமயத்தில் உங்கள் மகன் சர்வேஷ்க்கு இதுவரை வேலை செய்து கொண்டிருந்த ஒரு சிறுநீரகமும் செயலிழந்து விட்டது. உடனே மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று அங்கே இருந்த வைதேகி கந்தனிடம் மருத்துவர் கூறினார். அவர் கூறியதை கேட்டது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர் இருவரும். 

இரு தாய்மார்களும் அருகருகே அமர்ந்திருக்க, இரு கணவன்மார்களும் தங்கள் மனைவி அருகே அமர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். 

அப்பொழுது அருகில் இருந்த வைதேகியையும் கந்தனையும் பார்த்த கமலம் தன் கணவனிடம் ஏதோ கூறினார். 

அவரும் அதிர்ந்து தன்னை சமாளித்துக் கொண்டு உடனே கந்தன் அருகில் வந்து சர்வேஷ் எங்களுடைய மகன் என்றார். 

அதில் அதிர்ந்த கந்தன் “என்ன சொல்றீங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா?” என்றார் கோவமாக. 

ஒரு தேதி சொல்லி, “அன்று தானே உங்களுக்கு உங்கள் மகன் பிறந்தான்?” என்று கேட்டார் கமலா. 

வைதேகி ஆம் என்று தலையாட்ட, “அன்றுதான் எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது” என்றார் கமலா. 

அதன்பிறகு அன்று நடந்ததை கூறத் தொடங்கினார். “அன்று பிரசவ அறையில் மருத்துவர் உங்கள் குழந்தை இறந்து பிறந்த இருப்பதாகவும், இனிமேல் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்றும், இதை நீங்கள் எப்படி தாங்க போகிறீர்களோ என்றும் பேசிக் கொண்டு இருந்தார்கள். 

அப்பொழுது தான் எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தது. எங்கள் வருமையின் காரணமாக என் கணவரிடம் கூட கேட்காமல் என் ஒரு குழந்தையை உங்களிடம் கொடுக்க சொல்லிவிட்டேன்” என்றார் அமைதியாக. 

தேதி, மருத்துவமனை பெயர், எல்லாம் சரியாக இருக்க, வைதேகிக்கும் அவர் கணவனுக்கும் குழப்பமாக இருந்தது. 

உங்களுக்கு நாங்கள் சொல்லுவதில் எந்த சந்தேகம் இருந்தாலும் உங்கள் மகனுக்கு டி.என்.ஏ சோதனை மூலம் செய்து பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக கூறினர் கண்ணன். 

“இல்லை, நான் ஒத்துக்க மாட்டேன். இவன் என் பையன் தான். இவனை யாருக்கு தர மாட்டேன்” என்று புலம்பி அழ ஆரம்பித்தார் வைதேகி. 

அழுது கொண்டிருந்தவரின் அருகில் அமர்ந்த கமலம், உங்களிடமிருந்து, “யாரும் இப்போ உங்க பையனை வாங்கிக்க வரல. அவனை காப்பாற்ற தான் வந்திருக்கிறோம்” என்று அவரின் முதுகை தடவியபடியே கூறினார்.

அவர் அப்படி கூறியதும் வைதேகியும் கந்தனும் சற்றென்று அவர்களை பார்க்க, 

“நேற்று நடந்த விபத்தில் எங்கள் மகனின் மூளை செயலிழந்து விட்டது என்று கூறுகிறார்கள். மற்ற உடல் உறுப்புகளை தானம் பெற கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூற, அதே சமயம் உங்கள் மகனுக்கும் சிறுநீரக மாற்று செய்ய வேண்டும் என்கிறார்கள். ஒரு பிள்ளையை காப்பாற்றுவதற்காக தான் ஒரு பிள்ளை தன் உயிரை கொடுத்து விட்டான் போல” என்று கண் கலங்கினார். 

“பிறக்கும் போதே என் குழந்தைக்கு ஒரு சிறுநீரகம் தான் வேலை செய்வதாக மருத்துவர் கூறினார். உங்களிடம் ஏதாவது கூறி இருக்கிறார்களா?” என்றார் கண்ணன்.

‘ஆமாம்’ என்று தலையாட்டிய கந்தனுக்கு எல்லாம் புரிந்தது. தங்கள் இருவருக்கும் இல்லாத இரத்தப் பிரிவு மகனுக்கு இருப்பதன் காரணம் அவன் தங்களது மகன் இல்லை என்று. ஆனால் மனைவிக்கு புரியவைக்க வேண்டுமே. 

உடனே டி என் ஏ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தார்.

அதற்கிடையில் மருத்துவரிடமும், கமலம் கண்ணனிடம் பேசி, அனைவரின் முழு சம்மதத்துடனும், மருத்துவ விதிகள் படியும் குமரனின் சிறுநீரகத்தை தங்கள் மகன் சர்வேஷ்க்கு பொருத்த ஏற்பாடும் செய்தார்.

 வைதேகி, கண்ணன் மற்றும் கமலம் கால்களில் விழுந்து நன்றி கூறினார். 

கந்தன், குமரனின் இறுதி காரியம் அனைத்திலும் கண்ணனுக்கு உறுதுணையாக இருந்தார். 

நாட்கள் கடக்க சர்வேஷ் உடல் நலம் தேறி, வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். வீட்டிற்கு வந்த பிறகு ஒரு நாள் சர்வேஷ்சின் கையில் ஒரு காகித கவரை கொடுத்தார் கந்தன்.

அதை பிரித்துப் பார்த்த சர்வேஷ் அதிர்ச்சியில் “என்னப்பா சொல்றீங்க?” என்றான். அதில் அவனது டிஎன்ஏ பரிசோதனையின் முடிவுகள் இருந்தது. 

கந்தன் தன் மகனிடம் நடந்த அத்தனையையும் ஒன்று விடாமல் கூறினார். 

முழுவதையும் கேட்ட சர்வேஷ்க்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை. என்ன உணர்கிறான் என்றும் புரியவில்லை.

அவனின் அருகில் வந்த தாயின் மடியில் படுத்துக் கொண்டான். அவனின் தலையை கோதிய வைதேகி, “நீ மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல் வந்ததும் பயத்து விட்டேன். அங்கு வந்த பிறகு உனக்கு உடனே மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்றார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

அப்போது தான் அவர்கள் வந்தார்கள். நடந்தவை அனைத்தையும் சொன்னாங்க. உன் உடன்பிறந்த சகோதரனின் உறுப்பு தானமே, இன்று உன்னை உயிருடன் வைத்திருக்கிறது. 

உன் உடன்பிறந்தவன் இப்போது உயிருடன் இல்லை. உன்னை பெற்றவர்கள் மகனை இழந்து தவிக்கிறார்கள். 

இத்தனை காலங்கள் என்னை ஒரு தாயாக உணர வைத்தவர்கள், இன்று புத்திர சோகத்தில் இருக்காங்க. அவர்களை அக்கவலையில் இருந்து வெளியே வர வைக்க வேண்டும். அதனால்” என்று நிருத்தினார். 

“அதனால்” என்றார்கள் ஒருசேர கந்தனும் சர்வேஷ்சும். 

“அதனால் அவர்களையும் நம்முடனேயே இருக்க சொல்லலாம் என்று நினைக்கிறேன்” என்றார் மகிழ்ச்சியாக. 

அவர் கூறியதை கேட்டு இருவரும் மகிழ்ந்தாளும், இதற்கு அவர்கள் “சம்மதிப்பார்களா என்று தெரியவில்லையே?”  என்றார் கந்தன். 

அவர்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் இனி அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, என்னுடையது. அதை அவர்களால் மறுக்க முடியாது” என்று உறுதியாக கூறினான் சர்வேஷ். 

 நன்றி    

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16643-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!