எழுத்தாளர்: நிலானி
இரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக வட மாநிலங்களில் இருந்து இறங்கும் மக்களும், சுற்றுலா செல்ல குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி இருக்கும் கூட்டம் ஒரு பக்கமும், பிச்சை எடுக்கும் கூட்டமும் சந்தோஷமாக இருப்பதை பார்த்தேன், துப்புரவு பணியாளர் ஒருவர் எல்லோரையும் திட்டிக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருக்க நான் மட்டும் தனியாக நடந்து தூர சென்றேன் யாருமே இல்லாத இடத்தில் நோக்கி தண்டவாளத்தில் தலையை கொடுக்கலாம் என்று தனியே நடந்து சென்று போய்க் கொண்டிருந்தேன் பாறையின் இடுக்கில் செடியை பார்த்துள்ளேன். தண்டவாளத்தில் இருக்கும் இரும்பின் இடுக்கில் ஒரு பூவை பார்த்தேன் என்னே கடவுளின் படைப்பில் ஒர் இயற்கையின் அதிசயம். அந்த செடியின் வாழ்க்கையே தண்டவாளத்தில் பிறந்திருப்பதை பார்த்து என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வீடு திரும்பினேன்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/