எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
அஸ்வினியும், அர்ஜுனும் காதலர்கள். அஸ்வினி, அர்ஜுனிடம் திருமணத்திற்கு முன் நாம் ஏதாவது பனி பிரதேசத்திற்கு போகலாமா! என்றாள். காஷ்மீருக்கு சென்றனர். இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் அஸ்வினி அடித்துச் செல்லப்பட்டாள். அதிலிருந்து அர்ஜுன் சோகமாக இருந்தான். இது நடந்து ஐந்து வருடங்களுக்குப் பின், அர்ஜுனுக்கு வர்ஷாவுடன் திருமணம் நடந்தது. அர்ஜுனுக்கு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அர்ஜுன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. வர்ஷா காஷ்மீர் போக வேண்டும் என்பது என் கனவு! ப்ளீஸ் இடமாற்றத்திற்கு ஒத்துக்குங்க என்றாள். எதுவும் பேசாமல் சென்ற அர்ஜுன் அந்த வேலையை ராஜினாமா செய்தான்.
முற்றும்.
