10 வரி போட்டிக் கதை: லோனாரின் பிங்க் ஏரி

by admin 1
54 views

இந்தரும் சுரேந்தரும் மும்பையிலிருந்து புல்தானாவிலுள்ள லோனார் ஏரி எனும் இயற்கையின் அதிசய ஏரியை காண சாகச பயணம் மேற்கொண்டனர்.


நிலவில் இருக்கும் பள்ளம் போன்று காட்சியளிக்கும் இந்த ஏரியின் நீரானது உப்பு மற்றும் காரத்தன்மை உடையதாகவும் அப்படியும் அதில் உயிரினங்கள் வாழ்கின்றன என்பதை கேள்விப்பட்டு அந்த அதிசயத்தை கண்ணூர பார்க்க ஊர்தியில் ஏறி வந்துக்கொண்டிருந்தனர்.


“இந்த லோனார் ஏரி எப்படி கிரியேட் ஆனதுனு தெரியுமாடா உனக்கு? ஆக்சுவலி 52,000 இயர்ஸ் பேக் நடந்த இன்சிடன்ட் இது. அப்ப 2 மில்லியன் டன் வெயிட்டுள்ள ஒரு எரி நட்சத்திரம் 90,000 kmph ஸ்பீடுல எர்த்ல மோதினதால இந்த ஏரி கிரியேட் ஆகிருக்கு” என்று இந்தர் உரைத்தான்.
“ஆமாடா தெரியும்.

இப்ப ரீசண்டா 2020-இல் தான் இந்த ஏரியில் உள்ள ஆல்கேவால் பிங்க் கலர் ஏரியா மாறிடுச்சி. அதுக்கு அப்புறம் தான் இதோட ரேன்ஜே மாறிடுச்சி” என்று சுரேந்தரும் பதிலளித்தான்.


“நோடா சயின்டிஸ்ட்ஸ் என்ன சொல்றாங்கனா அதிக உப்புத்தன்மையுள்ள ஹாலோபாக்டீரியாசி அந்த ஏரியில் இருக்கதால தான் பிங்க் கலரா மாறிடிச்சினு சொல்றாங்க” என்று இந்தர் கூறினான்.


“ஓ அப்படியாடா? ஓகேடா அதுமட்டுமில்ல இந்த பிங்க் ஏரி தான் வேர்ல்ட்லயே த்தர்ட்(3) பிக்கஸ்ட் உப்பு நீர் ஏரிடா” சுரேந்தர்.
“வாவ் சூப்பர்டா.

இந்த லோனார் ஏரி பற்றி புராணங்களில் கூட இருக்குடா” இந்தர்”டேய் இதுபற்றி அய்னி அக்பரிலும் (Ain-i-Akbari) சொல்லி இருக்காங்க” சுரேந்தர் சொல்லிமுடிக்கவும் பிங்க் ஏரி வரவும் சரியாக இருந்தது.


“வாவ் வாட் அ பியூட்டிபுல் லேக் அண்ட் ஸ்பெக்டக்குலர் செனரி” என்று இருவரும் கோரஸாகவியந்து மொழிந்தனர்.


அவர்களின் சாகச பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கும் பொருட்டு ஏரியை சுற்றியுள்ளஇயற்கை பேரழகை குதிரையேற்றம் ஓடி ரசித்தும் படகு சவாரி செய்து ரசித்தும் அந்நாளைஇன்னும் பேரழகாக ரசித்தார்கள் நண்பர்கள் இருவரும்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!