எழுத்தாளர்: ஸ்ரீவித்யா பசுபதி
எல்லாம் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த அறைக்குள் தயக்கத்தோடு முகிலன்
நுழைந்தவுடன் கதவு தானாகவே சாத்திக் கொண்டது. எகிறிக் குதிக்கும் இதயத்தைக்
கெட்டியாகப் பிடித்தபடி பார்வையைச் சுழலவிட்டான்.
அங்கிருந்த நாற்காலியை நகர்த்திவிட்டு யாரோ எழுந்து வருவதுபோல ஓசை கேட்டது.
ஆனால் யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை. முகிலனின் வயிற்றில் அமிலம்
எக்கச்சக்கமாகச் சுரந்து பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது. அவன் தன்னைச்
சுதாரித்துக் கொள்ளும் முன்பே அவன் முன்னால் ஒரு உருவம் நெடுநெடுவென வளர்ந்து
நின்றது. பயத்தில் நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொள்ள, அப்படியே மயங்கி
விழுந்தான் முகிலன்.
முகத்தில் புளிச்சென ஏதோ தெளிக்கவே ரத்தமாக இருக்குமோ என்ற பயத்தில் வீறிட்டு
அலறியபடி கண்களைத் திறந்தான். எதிரே அவன் அம்மா கையில் வாளித் தண்ணீரோடு
நின்றிருந்தார்.
“நைட் ஏதாவது படத்தைப் பார்த்துட்டுத் தூங்கறதும், கண்ட கனவைக் கண்டுட்டு
கத்தறதுமே உனக்கு வேலையாப் போச்சு, எந்திரி டா.”
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
