10 வரி போட்டிக் கதை: வறுமையின் நிறம்

by admin 1
85 views

எழுத்தாளர்: உஷாராணி

பத்தாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் அந்தப் பள்ளியின் பெண்
குழந்தைகளுக்கு ‘மாத விடாய்க் கோப்பை’ பற்றி விழிப்புணர்வு முகாம் நடந்து
கொண்டிருந்தது. ஒரு ஆண் மருத்துவர் ஒரு பெண் செவிலியர் படம் வரைந்து விளக்கிக்
கொண்டிருந்தார்கள்.
“ஏய்.. இதெல்லாம் போய் இப்படிப் படம் வரைஞ்சு சொல்றாங்களேடி… அசிங்கமா
இல்ல”என்று தலை குனிந்த நிஷாவை அதட்டினாள் ரேகா. “இது சயின்ஸ் டீ.. நாம
கிராமத்துல இருந்தாலும் எல்லாமே தெரிஞ்சுக்கணும்.”
“இந்த கப் யூஸ் பண்ணா நீச்சலுக்குக் கூடப் பயமில்லாமப் போகலாம்” என்று
விளக்கிக்கொண்டிருந்தார் மருத்துவர். முகாம் முடிந்து ஆளுக்கொரு கப் இலவசமாகக்
கொடுத்தார்கள்.
“எங்கம்மா இன்னிக்கு அதிகமா ப்ளீடிங் இருக்குன்னு வயல் வேலைக்குப் போகல..இத
அவங்களுக்குக் கொடுத்து சொல்லித்தரப் போறேன்.. அடுத்த மாசத்துலருந்து அவங்களுக்கு
என் உண்டியல் காசுல சாதாரண நாப்கினாவது வாங்கித்தருவேன்” என்றாள் ரேகா.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!