10 வரி போட்டிக் கதை: வாரிசு பார்க்

by admin 1
64 views

“சார். ஓபன் பண்ண உடனே ஒரு குட்டி டைனோசர் இந்தியாவிலிருந்து பாரின் போன ஒரு குடும்பத்துல இருக்க சின்ன பெண் குழந்தை கிட்ட மாட்டுது. “

குறுக்கிட்ட புரொடியூசர்

“தம்பி நான் ஒன்னும் ஹாலிவுட் படம் எடுக்கல. 100 கோடி பட்ஜெட் போட்டு என்னால படம் எடுக்க முடியாது”

“சார் பொறுங்க சார். நான் கதையை இன்னும் சொல்லி முடிக்கல.

 குழந்தை அந்த டைனோசர் குட்டியோட தமிழ்நாட்டுக்கு திரும்பி வருது. அவங்க பங்காளி குடும்பத்துக்கும் இவங்க குடும்பத்துக்கும் நடக்குற பிரச்சனைய அந்தக் குழந்தையும் டைனோசர் குட்டியும் எப்படி தீக்குது அப்படிங்கிற தான் நம்ம கதை. 

படத்தோட லாஸ்ட் சீக்குவன்ஸில ஒரு பிரம்மாண்டமான அம்மன் பாட்டு. அந்த சின்ன குழந்தையோடு சேர்ந்து டைனோசர் குட்டியும் டான்ஸ் ஆடுது”.

“ஓகே தம்பி. கதையோட கான்செப்ட் சூப்பரா இருக்கு. இந்தாபுடி  அட்வான்ஸ் செக். ஆமா படத்தோட தலைப்பு என்ன?”

“வாரிசு பார்க்”

“படம் சக்சஸ் ஆச்சுன்னா பார்ட் 2 பார்ட்3 பார்ட் 4 வரைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணிக்கலாம் சார்”

“ஙே…”

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!