எழுத்தாளர்: க.ஆதிலட்சுமி
‘தோல உரிச்சுடுவேன்’அப்பாவின் சத்தம் வாழப்பழத்தில ஊசி ஏத்திவது போல் குத்திக்கொண்டிருந்தது.
வாழப்பழ வியாபாரி , பின்ன எப்படிப் பேசுவாரு.
‘காய் கனியாகும் வரை காத்துக்கிடக்கனும்’ அவசரப்பட்டு வேலய விட்டுட்டு வந்தா எப்படி?
‘அவருக்குப் பிடிச்ச வேலைய அவரு செய்றப்ப,என்ன மட்டும் ஏன் இப்படி பேசுறாருன்னு தெரியல’
கோபத்த சாப்பாடு மேல காட்டிட்டு போய்ப்படுத்துட்டேன்.
இதமான தென்றல், சன்னல் வழியாக வாழைமரங்களில் இருந்து வந்துகொண்டிருந்தது.
கண்ணயரும் நேரம் அப்பாவின் குரல் அருகில் கேட்க,
காற்றில் சாய்ந்துவிடுமோ ? பயத்தில் வாழையைச் சாய விடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.
வேகமாகப் போய் நானும் வாழையைத் தாங்கிப் பிடிக்க,அப்பாவின் ஆக்ரோசத்தை அருகிலிருந்து பார்த்தேன்.
கயிற்றை வாழையில் கட்டி,அதன் மறுமுனையைச் சன்னல் கம்பிகளில் கட்டினார்.
நல்ல வேல ‘வாழைய காப்பாத்திட்டோம்ப்பா’
என் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘வாழையடி வாழையாக நம் குலம் தழைக்க வேண்டும்ப்பா’
‘காலைல கோபத்தில பேசிட்டேம்ப்பா’
‘உனக்குப் பிடிச்ச வேலய செஞ்சுக்கோப்பா’
காலையில் பேசிய பேச்சுக்கும்,இப்ப அவர் பேசும் பேச்சுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் வாழைக்குலையாய் மனதில் தள்ளிக்கொண்டிருந்தது.
முற்றும்.
