எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்.
தங்கள் ஊரில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கான விளம்பர பலகையை பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.
அவர்களது ஊர் விவசாய நிலங்கள் நிறைந்தது மட்டுமல்லாமல், இரண்டு மாடி கட்டிடத்திற்கு மேல் கட்டினால் அதிக நாள் தாங்காது என்ற மண்வளம் கொண்டது.
தன் கல்லூரி படிப்பை முடித்த ரவி கேம்பஸில் செலக்ட்டாகி பிரபல ஐடி நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான்.
வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் அப்பாவிற்கு விவசாயத்தில் உதவி புரிவதும் மற்றும் அவர்கள் ஊரில் உள்ளவர்களுக்கு தேவையான உதவி புரிவதும் தான் அவனது ஒரே குறிக்கோள்.
ரவியின் அப்பா அம்மாவின் மூத்ததாக மகன் அருகில் உள்ள ஊரில் இன்ஸ்பெக்டராக இருக்கிறான். ரவி சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவும் குணமும் சமூக அக்கறையும் உடையவனாக இருந்தான். சமூக சீர்திருத்தங்கள் அனைத்திற்கும் பணமும் தேவைப்பட்டதால் தன் படிப்பை சிறப்பாக முடித்து, ஐடி கம்பெனியில் சேர்ந்து முன்னேறி இதோ உயர் பதவியில் இருந்து, கிடைக்கும் பணம் வைத்து ஊருக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறான்.
இன்று வேலை முடிந்து வரும் பொழுதுதான் அவனுக்கு அந்த விளம்பர பலகை கண்ணில் தெரிந்தது. என்ன என்று விசாரிக்க சென்னைக்கு அருகில் உள்ள அமைதியான ஊர் என்பதால் இங்கு அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
அதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட ரவி அடுத்த நாள் முதலில் சந்தித்தது அந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை தான்.
அவர்களிடம் நீங்கள் எங்கள் ஊரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என்று வற்புறுத்தினான்.
அவர்கள் அவனது பேச்சை அலட்சியமாக்க,
அவனோ “எங்கள் ஊரின் மண் வளம் விவசாயத்திற்கு தகுந்தாற்போல் தான் இருக்கும். அது மட்டுமல்லாது அதிக உயரமான கட்டிடங்களை அங்கு கட்டக் கூடாது” என்று அதற்குரிய கோப்புகள் அனைத்தையும் எடுத்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் காண்பித்தான்.
அவரும் மாற்று கோப்பு ஒன்றை எடுத்து அவனிடம் காண்பித்து “இங்கு இருபத்தைந்து மாடி வரை கட்டலாம் என்று இருக்கிறது. நாங்கள் வெறும் பன்னிரெண்டு மாடி தான் கட்டுகிறோம்” என்றான் திமிராக.
அவனின் திமிரை கண்ட ரவிக்கு இவர்கள் சொன்னால் கேட்பது போல் தெரியாததால் அடுத்தடுத்து சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை முறைப்படி செய்து அவர்களது ஊரில் அடுக்குமாடி கட்டிடம் வருவதற்கு தடை செய்தான்.
பண பலத்தாலும் பதவி பலத்தையும் கொண்டு ரவியை அடிக்க வந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்.
அவரிடம் “சோறு போடும் பூமியில் எல்லாம் அடுக்குமாடி கட்டிடம் கட்டி விட்டீர்கள் என்றால், அதில் குடியிருப்பவர்களுக்கு யார் சோறு போடுவது? அதை உங்களால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாதா? தயவுசெய்து ஏதாவது பொட்டல் காட்டில் போய் வீட்டை கட்டுங்கள். வருமையில் இருக்கும் விவசாயிடம் பணத்தாசை காட்டி நிலத்தை வாங்குவது, சொந்த வீடு வாங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும் நடுத்தர மக்களின் கனவை தரமில்லாத இடத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டி, அவர்களை உயிருடன் புதைத்து விடாதீர்கள். தயவுசெய்து தரமான இடத்தில் தரமாக வீடு கட்டுங்கள். விவசாய பூமியை விவசாயம் செய்ய விடுங்கள்” என்று கோபமாக கூறிச் சென்றான்.
நன்றி