எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன்
“அப்பா..! உங்க பேத்தி கல்யாணத்துக்காக கனடாவுக்கு கூட்டிட்டு போகத் தான் நானும் உங்க மருமகளும் வந்திருக்கோம்.”
“சரி…இதைப் பாரு..! என் பேத்தி கல்யாணத்தை அங்கே வச்சுட்டதால நான் வரேன். ஆனா மறு வாரமே திரும்பிடுவேன்.”
மறுநாள் கனடாவிற்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு விமானத்தில் புறப்பட்டு வீட்டை அடைந்தார் மணியன்.
அவர்கள் வீடு ஊருக்கு கடைசியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்தது.
மறுநாள் மாலை அனைவரும் திருமணத்திற்கு பொருட்கள் வாங்க சென்று விட்டனர்.
மணியன் தனியாக வீட்டில் இருப்பதையும், திருமண நெருங்கியதால் இந்தியர்கள் வீட்டில் தங்க நகைகள் இருக்கும் என்று திருடன் வீட்டின் உள் நுழைந்தான்.
வயதான வேட்டிக் கட்டிய கிராமத்து ஆள் என்று நினைத்து கத்தியைக் காட்டி மிரட்டினான் திருடன்.
சிலம்பம் தெரிந்த மணியன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அருகில் கிடந்த ‘வேக்கம் கிளீனர்’ உடைய பம்பை உருவி அவனை நையப் புடைத்து கட்டிப் போட்டார்.
வெளியே சென்று இருந்த பையன் வந்துப் பார்த்து, காவல் துறையினர் இடம் திருடனையும், கேமிராவில் பதிந்திருந்த படங்களையும் ஒப்படைத்து விட்டு அப்பாவைக் கட்டிக் கொண்டான்.
வயதான இந்தியர் வேட்டியை மடித்துக் கட்டி திருடனுடன் சண்டை போடுவது எங்கும் வைரலானது.
முற்றும்.