எழுத்தாளர்: S. முத்துக்குமார்
இப்போதெல்லாம் நான் பெல்ட் கட்டுவதே இல்லை. இடுப்பில் நிற்காத லூசான பேண்ட்களை அலமாரியில் வைத்து விட்டேன். எனக்கு 30 டயிட்டா இருக்கும், 32 விழுந்து விடும்..அப்படியான ஒரு இடுப்பு.
ஆசையாக ஒரு பெல்ட் வாங்கி கட்டினேன்…”டேய் பெல்ட் போட்டா, சட்டையை உள்ளே விடணும்டா” என்று சொன்னான் நண்பன். அடுத்த நாள், “சோளக்காட்டு பொம்மை மாதிரி, என்னடா இது” கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு போனான் இன்னொருத்தன். பழைய நண்பன் திரும்ப வந்து சீரியஸா முகத்தை வைத்து, “கண்ணா, பெல்ட்டை போட்டு, சட்டையை உள்ளே விட்டா, செருப்பு போடக் கூடாது, ஷூ தான் போடணும்” என்றான்.
இப்போ ஷூ க்கு நான் எங்கே போறது..? ‘துணியை இடுப்புல நிறுத்த இத்தனை ஆர்பாட்டமாடா..’ நொந்து போய் பெல்ட்டை கழற்றினேன், சட்டையை வெளியே விட்டேன். இப்போ அவனவன் வேலையை பார்க்கறான்…!!
முற்றும்.