எழுத்தாளர்: நந்தினி கிருஷ்ணன்
அந்த ஊரிலேயே சிவா மிகப்பெரிய தொழில் அதிபர். வீட்டிலேயே 3 கார்கள் வேலையாட்கள் என்று மிகவும் பணக்காரராக இருந்தார். அவருக்கு ஒரே மகன் ரவி பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்திருந்தாலும் அப்பாவின் ஆசைப்படியே மெடிக்கல் சேர வேண்டும் என்று அதிகமாக பணம் கொடுத்து மெடிக்கல் காலேஜில் சேர்ந்தான் தினமும் காரில் தான் செல்லுவான் அவனுக்கு அவனுடைய நண்பர்கள் எல்லோரும் மோட்டார் சைக்கிளில் வருவதை பார்த்தவுடன் அப்பாவிடம் கேட்டதற்கு “வீட்டில் இவ்வளவு கார் இருக்கும்போது எதற்கு மோட்டார் சைக்கிள்” என்று மறுத்துவிட்டார். இருந்தாலும் அம்மாவிடம் பிடிவாதமாக கேட்டதும் அப்பா அரை மனதாக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். தினமும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிள் செல்வது ரவிக்கு ஆனந்தமாக இருந்தது. அன்று வேகமாக செல்ல வேண்டும் என்று ஆசையுடன் நோ என்டரியில் அதிவேகமாக செல்ல எதிரே வந்த ஒரு லாரி அந்த மோட்டார் சைக்கிளில் மோதி அந்த இடத்திலேயே ரவி இறந்து விட்டதாக அவன் அப்பாவுக்கு தகவல் சொல்ல “இதற்கு தானே மோட்டார் சைக்கிள் வேண்டாம் என்று சொன்னேன்” என்று மகனின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
நன்றி