எழுத்தாளர்: எ.சாக்ரடீஸ்
1.பங்களா வேலைக்காரிக்கு நித்தமும் வேலை செய்த கலைத்த பின் உறங்குவது
வழக்கம்.
2.திடீரென இளவரசியாகி தனியொரு உலகில் பவனி வரவேண்டுமென்று…
3.அலாவுதீன் விளக்கு போல் தேய்த்ததும் கடலில் கலந்துவிட்டாள்.
4.ஆர்ப்பரிக்கும் கடலில் தங்கத்தாரகையாய் மின்னும் அவளது மேனி..
5.அலையும் அலையில் கால் நனைக்க ஆனந்தமாய் அவள்…
6. அழுக்குடையில் அவனி வரும் அவளது வஸ்திரம் இன்று பிரம்மாஸ்திரம்
கிடைத்தவளாய்….
7.யாருமில்லா உலகில் அவள் மட்டும் கடலோர கன்னியாய் கவலை மறந்து இருக்கின்ற
நேரத்தில் மீன்கள் அவளது பாதம் தொட்டு விளையாடுகின்றன.
8. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் இன்னொரு மேனி இன்னொரு வண்ணம்.
9. பங்களா வீட்டில் சிறை கிடந்த சிறகொன்று ஆழியில் பறக்கின்றது.
10. புவனா…இங்க தரை அழுக்கா இருக்குமா!…என்ற குரல் ஓலிக்க சட்டென கண்
விழித்தாள்…பங்களா வேலைக்காரி…புவனா….
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
