எழுத்தாளர்: நா.பத்மாவதி
1. கணவன் ஷ்யாம் மனைவி மேனகா 2 குழந்தைகள் என சந்தோஷமான சிறிய குடும்பம்.
2. ஷ்யாம் வட்டிக்கு கடன் தரும் தொழில் செய்பவன், பணத்திற்கு பிரச்சனை இல்லாத வாழ்வு.
3. தெரிந்தவர்கள், தொழில் செய்பவர்கள், வீடு கட்டுபவர்கள், வீட்டு தேவைக்கு கடன் வாங்குபவர்கள் என ஏராளமானவர்களுக்கு பணம் கொடுத்து தினம், வாரம், மாதம் என பலவகையில் வசூல் செய்வான்.
4. அப்படி வீடுதோறும் வசூலிக்க போகும் போது ஒரு பெண்ணோடு அடிக்கடி பேசுவதை பார்த்ததாக பலரும் சொல்ல மேனகா நம்பவில்லை.
5. அவன் புருஷன் மட்டுமல்ல, தாய்மாமனும் கூட , அதனால் மேனகாவுக்கு ஷ்யாம் மீது அளவு கடந்த அன்பு, காதல் , நம்பிக்கை.
6. அன்றும் தினசரி போல கலெக்ஷன் போனவன் வரவே இல்லை.
7. அவன் செல்லும் இடமெல்லாம் விசாரித்ததில் அன்றைய கலெக்சன் வாங்கியிருக்கிறான் எனத் தெரிந்தது.
8. அடுத்தநாள் விடிந்ததும் அவன் பேசிக் கொண்டிருக்கிறான் என்ற பெண்ணின் வீட்டிற்கு
சென்றவளுக்கு அங்கிருந்த சூழ்நிலை பெருங் கொடுமையாக இருந்தது.
9. ” 2 பெண்குழநதைகள் 1 ஆண்குழந்தை என சிறு குழந்தைகளை விட்டு விட்டு அவனோட போய்ட்டாளே, இந்த பிஞ்சுகள வச்சுட்டு நா என்ன பண்ணுவேன் ” என புருஷனின் கதறல் கேட்க முடியவில்லை.
10. இப்படிப்பட்ட நம்பிக்கை துரோகி இரண்டு குடும்பத்தக் கெடுத்து இவனோட கேவலமான ஆசைக்காக என்னை, குழந்தைகள விட்டு போனவன நினைக்கவே கூடாது என வைராக்யமாக தான் சிறு வயதில் கற்ற தையலை துணை கொண்டு குழந்தைகளை ஆளாக்க வேண்டும் என முடிவெடுத்தாள் இந்த தையல்(பெண்).
முற்றும்.